Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘அங்காடி தெரு’ படம் சொன்னதை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி தெரிவித்தார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2010-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் அங்காடி தெரு’. இயக்குநர் வசந்த பாலனின் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

படத்தின் கதை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு துணிக் கடையில் வேலை செய்யும், நாயகன், நாயகியைப் பற்றியது. 18 மணி நேரமும் அந்தத் துணிக் கடையில் நின்று கொண்டே வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரின் கஷ்டங்களையும் இத்திரைப்படம் எடுத்துச் சொன்னது.

புதிய கண்ணோடத்துடன், புத்தம் புதிய கதையுடன் வெளிவந்த இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாக நடிகை அஞ்சலி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதையும் பெற்றிருந்தார்.

தற்போது இது போன்று தமிழகம் முழுவதும் உள்ள துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற தமிழக சட்டப் பேரவையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 1947-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்ட திருத்தம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘அங்காடி தெரு’ படத்தின் இயக்குநரான வசந்தபாலனும் இந்த சட்ட திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “தமிழக அரசுக்கு நன்றி. என் ‘அங்காடித் தெரு’ திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. ‘அங்காடித் தெரு’ திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக் கூடிய ‘வெரிக்கோஸ் நோய்’ பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்…” என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு திரைப்படத்தால் சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டவர்களுக்கு இதுதான் பதிலாகும்..!

- Advertisement -

Read more

Local News