ஷங்கர் இயக்கத்தில், கமலின் இந்தியன் பட ஸ்பார்ட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை வலையொளியில் பகிர்ந்துள்ளார்.
அதில் வசந்தபாலன், “என்னை கண்டாலே கலுக்கு பிடிக்காது. எப்போதும் முறைத்துக் கொண்டே இருப்பார்.
சங்கர் சார் எப்பவுமே காட்சியை நடித்து காண்பிப்பார். வேணு சார் கமல்ஹாசனை வீட்டில் சிறை வைத்து இருப்பார்.
அந்தக் காட்சி முதலில் என்னை நடித்துக் காண்பிக்கச் சொன்னார் இயக்குநர். நானும் கயிறு கட்டப்பட்ட நிலையில் சட்டென புரண்டு நான் நடித்தேன். அது ஷங்கர் சாருக்கு பிடித்துவிட்டது.
அடுத்து கமல்ஹாசன் சார் மேக்அப் உடன் வந்தார். அந்தக் காட்சியை எடுக்கும்போது அவர் விஸ்க் விஸ்க் என்று மெதுவாக வருவார். கேமரா ஓடிக்கொண்டிருந்தது.
ஷங்கர் சார் கமலிடம் சார் கொஞ்சம் வேகமாக வாருங்கள் என்றார். அதுவும் சரியாக வரவில்லை. அடுத்து என்னை நடித்து காண்பிக்க சொன்னார்.
நானும் நடித்து காண்பித்தேன். அவ்வளவுதான் கமல் சார், “வாட் நான்சென்ஸ்” என்று கத்தினார். எல்லோரும் அங்கிருந்து ஓடிவிட்டோம். எனக்கு மனது கஷ்டமாக இருந்தது.
திரைப் படத் துறையை விட்டு வெளியேறிவிடலாமா என்று நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.