Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

வாரிசு, துணிவு.. ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வம்சி இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்த திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதே போல்  எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

- Advertisement -

Read more

Local News