வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது. இப் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
படத்தின் போஸ்டர், ட்ரெய்லர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில், நேற்று, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது.
கோட் சூட்டுடன் படு ஸ்டைலிஷாக கால் மேல் கால் போட்டு விஜய் அமர்ந்திருக்க தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என்ற டாக் லைனுடன் போஸ்டர் அமைந்துள்ளது.