Thursday, April 11, 2024

‘வாரிசு’: குஷ்புவுக்கு அவமானம்?: எடிட்டர் விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது வாரிசு திரைப்படம்.

படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

இப்படத்தில் குஷ்புவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தகவல்களும் வெளியாகின. படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது அவர், ‘கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட போது, விஜய்க்கு கடும் காய்ச்சல். அதோடு படத்தில் நடித்துக்கொடுத்தார்’ என்று பேசினார்.

ஆனால், படம் வெளியானபோது அவர் நடித்த ஒரு காட்சி கூட இல்லை.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், படத்தின் எடிட்டர் கே.எல்.பிரவீன் “நடித்தும் படத்தில் இல்லாதவர்கள் என்னை பார்த்தால் கொன்றுவிடுவார்கள்.

அந்த அளவுக்கு என் மீது கோபத்தில் இருப்பார்கள் என்பது தெரியும். அவர்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பாராத வகையில் – படத்தின் நீளம் கருதி – சில காட்சிகளை  நீக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று கூறியிருக்கினார்.

ஆனாலும், “நீளத்தை கவனத்தில் கொள்ளாமலா திரைக்கதை அமைப்பார்கள்? தவிர, அப்படி கருதினால், ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்த காட்சிகளை நீக்குவார்கள். குஷ்பு முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போதும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது காட்சிகளை நீக்கியிருக்கிறார்களே” என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

இதற்கும் பதில் அளிக்கும்படியாக், “நீக்கப்பபட்ட காட்சிகளை  மீண்டும்  சேர்த்து விடலாம் என நம்பிக்கையில் உள்ளோம். இது பற்றி இயக்குனர் வம்சி குஷ்பூவிடம் பேசி விட்டார்” என்று எடிட்டர் கே.எல்.பிரவீன் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News