Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“அம்மன் வேஷம் போட்டு கொண்டு அசிங்கமாக பேசிய வனிதா..!” – கொந்தளித்த நடிகர் நகுல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமார், சமீபத்தில் ‘பிக்பாஸ் ஜோடி’ நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகினார். தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாலும், நடுவர்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டதாலும் போட்டியில் இருந்து விலகுவதாக வனிதா விஜயகுமார் அறிவித்திருந்தார்.

ஆனால் அந்தப் போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்த நடிகர் நகுல், ரம்யா கிருஷ்ணனை வனிதா மோசமான வார்த்தைகளால் திட்டியதாக புகார் கூறியுள்ளார்.

பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தாவுக்கு ஜோடியாக நடனமாடி வந்தார் வனிதா. அதில் இவர் காளி அம்மன் வேடம் போட்டு டான்ஸ் ஆடியபோது… இவரது நடனத்தை நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் விமர்சனம் செய்து, மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியது, வனிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்த செட்டிலேயே நடுவர்களுடன் விவாதம் செய்தார்.

இந்த பிரச்சனையின் காரணமாக தான் இந்த நிகழ்ச்சியை விட்டே விலகுவதாக அறிவித்து ஷாக் கொடுத்தார் வனிதா விஜயகுமார். தான் விலகுவதற்கு காரணம் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணன்தான் என்பதையும் மறைமுகமாக தெரிவித்திருந்தார் வனிதா.

தற்போது இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் நடுவர்களின் ஒருவரான நகுல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அந்த 4 நிமிட பாடல் காட்சியில், 2 நிமிடங்கள் வனிதா நடனமே ஆடவில்லை. ச்சும்மா அமர்ந்துதான் இருந்தார். அதனால் அவர் ஆடத் துவங்கும்போது ரொம்பவும் எனர்ஜியுடன் ஆடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை.

அதனால்தான் எங்களது ஏமாற்றத்தை நாங்கள் தன்மையாகத்தான் வனிதாவிடம் கூறினோம். ஆனால் அவர் அம்மன் வேஷம் போட்டு கொண்டு எங்களை அசிங்கமான வார்த்தையால் பேசி திட்டினார். என்னை பேசினால்கூட பரவாயில்லை. ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்.. அவரைப் போய் இப்படி பேசலாமா..?” என்று நகுல் ஆதங்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News