Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

வனிதா விஜயகுமாருக்குக் கிடைத்திருக்கும் புதிய பெயர் ‘வைரல் ஸ்டார்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாயகனாக, குணசித்திர நடிகராக, நகைச்சுவை நடிகனாக தயாரிப்பாளராக அரசியல்வாதியாக பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கும் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அடுத்து இசையமைப்பாளராக அடி எடுத்து வைக்கிறார்.

2 எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் ‘பிக்கப்’ படத்தில்தான் அவர் இசையமைப்பாளராக களம் இறங்குகிறார். பல பிரபல இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் பாட இருக்கிறார்கள். இந்தப் படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனே இயக்குகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

ந்தப் படத்தில் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி  காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

சீனிவாசனை மூன்றாவதாக மணம் முடித்து ஒரு பங்களாவில் குடியேறுகிறார் வனிதா. அந்தபங்களாவில்  பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம். திரில்லர், திகில், காமெடி என்று மூன்றையும் சரி சமமாகக் கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.  இதில் காமெடி மட்டும் பிரதானமாக இருக்குமாம்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “இந்த பிக்கப்’ படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு இயக்கமும் செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தின் டைட்டிலில் வனிதாவுக்கு வைரல் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்…” என்கிறார் பவர் ஸ்டார்’ சீனிவாசன்.

சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் இந்தப் படம் வளர்ந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News