Friday, April 12, 2024

‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் ஏன் நடத்தப்படவில்லை..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தல’ அஜீத்குமார் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியிருக்கிறது. படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இதற்காக ஹைதராபாத் வந்து குவிந்திருக்கிறார்களாம்.

அனைத்து நடிகர், நடிகைகளும் ஹைதராபாத்தில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 5 ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாள் வாடகையே பல ஆயிரங்கள் என்றால், 7 ஸ்டார் ஹோட்டலில் லட்சத்தைத் தாண்டி விடும். ஆனாலும், கடந்த மூன்று ஷெட்யூல்களிலும் அனைத்து நட்சத்திரங்களும் 7 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இத்தனைக்கும் அங்கே கடைசியாக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் சாலைகளில் நடக்கும் பைக் ரேஸ் மற்றும் சண்டை காட்சிகள்தான். அவற்றை சென்னையிலேயே படமாக்கியிருந்தால் நிறைய செலவு மிச்சயமாகியிருக்கும்தான்.

ஆனால், இது குறித்து படத்தின் இயக்குநரான வினோத்திடம் கேட்டபோது, “படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு எந்தவிதக் குறையும் இருக்கக் கூடாது என்பது தயாரிப்பாளரின் உத்தரவு ஸார். அதனால் அவர்களுக்கு வேண்டிய வசதி, வாய்ப்புகளை செய்து தந்திருக்கிறோம்.

படப்பிடிப்பை பொறுத்தமட்டில் சென்னையில் ஒரு ரோட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமெனில் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காது. ஆனால், ஹைதராபாத்தில் அப்படியில்லை. தாராளமாக ஷூட் செய்யலாம். உடனேயே அனுமதி கிடைக்கும். அதனால்தான் வேறு வழியில்லாமல் ஹைதராபாத்தில் ஷூட்டிங் எடுக்கிறோம். தமிழக அரசு மனம் வைத்து இதில் ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்…” என்றார்.

பகல் நேரங்களில் அண்ணா சாலை போன்ற பொது இடங்களில் ஷூட்டிங் வைத்தால் டிராபிக் ஜாமாகும். பொது ஜனங்களுக்கு பிரச்சினையாகும் என்பதால்தான் பகல் நேரங்களில் சென்னையில் சாலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை. ஆனால், இரவு நேரத்தில் மட்டுமே அனுமதி தரப்படுகிறது.

ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டி போல சென்னையின் அருகே ஒரு பிலிம் சிட்டியை உருவாக்கி அதில் இது போன்ற சாலைகளை அமைத்துக் கொடுத்தால் படப்பிடிப்புகளை எளிதாக நடத்தி விடலாம்.

ஆனால், மாநில அரசு மனம் வைக்க வேண்டுமே..?!

- Advertisement -

Read more

Local News