Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வடிவுக்கரசிக்கு உயிர் பயத்தைக் காட்டிய வசனகர்த்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை வடிவுக்கரசி, தனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை வீடியோ பேட்டியில் பகிர்ந்துகொண்டார்:

“கமலுடன் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்த பிறகு சில  படங்களில் நடித்தேன். பிறகு ஒதுங்கி இருந்தேன். மீண்டும் அதே கமலுடன் சத்யா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்தேன்.

இந்த நிலையில், தான் இயக்கப்போகும் கிழக்குச் சீமையிலே படத்தில் நடிக்கும்படி பாரதிராஜா அழைத்தார். தேனி பகுதியில் படப்பிடிப்பு. நானும் சென்றுவிட்டேன்.

விஜயகுமார் மனைவி கதாபாத்திரம் எனக்கு. திடீரென பாரதிராஜா, ‘இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு மனைவி கதாபாத்திரம் வேண்டாம் என நினைக்கிறேன். ஆகவே இன்னொரு படத்தில் வாய்ப்பு தருகிறேன்’ என்றார்.

எனக்கு ஆத்திரமாகிவிட்டது, ‘இது உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா.. என்னை நடிக்க அழைத்தபோது, நான் ரயிலில் வந்து இறங்கியபோது.. படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோதெல்லாம் தெரியாதா? என்னை கழற்றிவிட்டுவிட்டு வேறு எந்த முண்டச்சியை நடிக்க வைக்கப்போறீங்க’ என சத்தம் போட்டேன்.

பாரதிராஜா, கோபத்தில் செருப்பை கழட்டி என்னை அடிக்கவந்துவிட்டார். அதோடு, ‘அந்த கதாபாத்திரத்தில் எந்த முண்டச்சியும் நடிக்கமாட்டாள்’ என கத்தினார்.

அங்கிருந்த வசனகர்த்தா ரத்னகுமாரும் ஆவேசமாகி, ‘எடுடா அரிவாளை.. அவளை  இப்பவே வெட்டுறேன்..’ என்று கொந்தளித்தார்.

இப்படி படப்பிடிப்பு தளமே ரணகளமாகிவிட்டது..” என்று அந்த டெரர் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் வடிவுக்கரசி.

- Advertisement -

Read more

Local News