Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

சத்யராஜின் ‘வெப்பன்’ படத்துக்கு வடிவேலு பாராட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வெப்பன்’. இப்படத்தில் வஸந்த் ரவி, ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. இப்படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிக்காக ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளவயது சத்யராஜை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்துக்கு நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:“என் அன்பு அண்ணன் சத்யராஜ் ‘வெப்பன்’ படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் இப்படத்தை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் முதன் முதலாக இப்படத்தில் ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. ‘வெப்பன்’ படத்தினை எல்லோரும் பார்த்து மகிழுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News