Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வதந்திகள் செய்திகளாவது எப்படி என்பதை சொல்ல வரும் ‘வதந்தி’ இணையத் தொடர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் தம்பதியினரான புஷ்கர் மற்றும் காயத்ரியின் Wall Watcher Films சார்பில்  தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ இணையத் தொடர் வரும் டிசம்பர் 2-ம் தேதி அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் மூலமாக 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்த ‘வதந்தி’ தொடர், இளமமையும்  அழகுமான  வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இத்தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த  போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பொய்களின் வலையில் சிக்கியிருக்கும், உண்மையைக் கண்டறிய அவர் போராடும் கதை வெகு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த கதையை  உருவாக்கியது குறித்து  இயக்குநர் ஆண்ட்ரூ பேசும்போது,  “நீண்ட  காலமாக இந்த ‘வதந்தி’ தொடரின் கதை என் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும்  பல விஷயங்கள், நாம் படிக்கும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் பல்வேறு தளங்களில் நமக்கு கிடைக்கும் தரவுகள் இது எல்லாம் நிறைந்ததுதான் இந்த தொடர். 

மிக நீண்ட காலமாக, எனக்குள் ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது, ‘நமக்கு தரப்படும் செய்திகளில் உண்மையிலேயே  முழு உண்மையும் கிடைக்கிறதா, அல்லது  உண்மையை சார்ந்து இருக்கும் பாதி உண்மையை  மட்டுமே நாம் பெறுகிறோமா? இல்லை இவை அனைத்திலும், உண்மை மறைக்கப்பட்டு  போகிறதா?’ இந்தக் கேள்விகள் என் மனதில் ஒலித்தன. இதுதான் இந்தக் கதையின் தொடக்கம்.

காலப்போக்கில், நான் நிறைய விஷயங்களைச் சேகரித்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது ஒரு தொடராக உருவாக்கப்படுவதற்கு என்னிடம் போதுமான விசயங்கள் இருப்பதை உணர்ந்தேன்..! அதுதான் இப்போது தொடராக மாறி உள்ளது.” என்றார்.

தயாரிப்பாளர்கள்  புஷ்கர்- காயத்ரி பேசும்போது, “ஒரு தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது. மக்கள் எப்படி பயணம் செய்கிறார்கள் அல்லது ஆன்லைனில் படங்களைத் தேடுகிறார்கள் என்பதைப் போன்றது.

கடந்த 2-3 ஆண்டுகளில், தென்னிந்திய படங்கள் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய பகுதிகளில் இருந்து வரும் இந்த ‘வதந்தி’ போன்ற கதைகள், அத்தகைய தனித்துவத்தை கொண்டுள்ளன.  அதுதான்   எங்களை  ஆக்கப்பூர்வமான பல கதைகளை மீண்டும் மீண்டும் வழங்க தூண்டுகிறது.

பிரைம் வீடியோவுடன், எங்களது  இந்த கதை மிக பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையவிருக்கிறது. இத்தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு மேல்  திரையிடப்பட உள்ளது.” என்றார்கள்.

- Advertisement -

Read more

Local News