Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு கிடைத்த காதலி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் வாலிப கவிஞர் என்று புகழப்பட்டவர்  வாலி.  எம்.ஜி.ஆருக்கு பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அவ்வாறு வாலி எழுதிய பாடல்களில் “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே” என்ற பாடலும் ஒன்று. இப்பாடல் “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் இடம்பெற்றது.

இப்பாடல் வெளிவந்த சமயத்தில் ஒரு ரசிகை வாலிக்கு தினமும் கடிதங்கள் எழுதி வந்தாராம். அந்த கடிதத்தில், “நான் மைலாப்பூரைச் சேர்ந்த பெண், நான் உங்களை சந்திக்க வேண்டும்” என தொடர்ந்து எழுதி வந்தாராம்.

ஒரு நாள் வாலி, “நாளை என்னை நீங்கள் சந்திக்க வரலாம்” என்று பதில் கடிதம்  எழுதினாராம். அதற்கு அடுத்த நாள் அந்த கடிதத்தை கையில் வைத்திருந்தவாறு அந்த பெண் வாலியை பார்க்க வந்தாராம். அதன் பின் அடிக்கடி இருவரும் சந்தித்துக்கொண்டார்களாம்.

சில நாட்களில் அவர்கள் மிகவும் நட்போடு பழகத் தொடங்கினர். அதனை தொடர்ந்து அந்த நட்பு காதலாகி மாறியது. அதன் பின் வாலி அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணின் பெயர் ரமணி திலகம். இவ்வாறு தன்னுடைய ரசிகையையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் வாலி.

- Advertisement -

Read more

Local News