Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

நெகிழ்ச்சி: புனித்துக்கு இப்படி ஓர் அஞ்சலி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ள படம் ‘கப்ஜா’. திரில்லர் ஜானரில்  உருவாகியிருக்கும் இப்படத்தை ஆர்.சந்திரசேகர் தயாரிக்க, ஆர்.சந்துரு இயக்கியுள்ளார்.  ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, சுதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ரவி பஸ்ஸூர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், மார்ச் 17ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

படக்குழுவினர், “மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாள் மார்ச் 17.  அவருடைய புகழைக் கொண்டாடும் வகையில் அன்று இப்படத்தை வெளியிடுகிறோம்” என்றனர்.  

- Advertisement -

Read more

Local News