Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

’த்ரிஷா விவகாரம்’’ மன்சூர் அலிகானுக்கு சம்மன்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மன்சூர் அலிகான் சமீபத்தில்  செய்தியாளர்கள் சந்திப்பில் லியோ படத்தில் நடித்தது பற்றி கூறும் போது த்ரிஷா குறித்து பேசினார். அவர் பேசியதாவது, லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் அந்த சீன் வைப்பார் என நினைத்தேன்  னக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதன் பின் நடிகை ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

இதனிடையே அவர் பேசியதற்கு பலதரப்பில் இருந்து  எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது.

மேலும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மன்சூர் அலி கானின் வீட்டிற்கு சென்று சம்மன் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News