பர்வீன் பாபி பாலிவுட்டில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்தவர். “அமர் அக்பர் அந்தோணி, சுஹாக், காலா பத்தர், ஷான், கிராந்தி, காளியா, நமக் ஹலால்” போன்ற பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். அவர் 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார், மேலும் அந்த படங்களில் 10 திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156137.jpg)
2005 ஆம் ஆண்டு, அவர் மறைந்தார். இந்த நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த பயோபிக்கை, பிரபல இயக்குநர் ஷோனாலி போஸ் இயக்கவிருக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156138.jpg)
அதில், “அனிமல்” படத்தில் நடித்த திரிப்தி டிம்ரி, பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.