ராஜ்குமார் இரானி இயக்கிய படம் ‘டங்கி’. பதான், ஜவான் படங்களின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்துள்ள இப்படத்தில் டாப்ஸி, போமன் இரானி, விக்கி கவுஷல் விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிச. 21-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி இருக்கு – பான் இந்தியா என்ற பெயரில் துப்பாக்கி, பீரங்கி சத்தங்கள், ரத்த வன்முறை நிறைந்த ஆக்ஷன் படங்களுக்கு நடுவே நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபீல்குட் படம் பாலிவுட்டிலிருந்து வருவது நல்ல விஷயம். இங்கிலாந்து செல்ல முயற்சி செய்யும் நான்கு பேர்களின் கதையை இப்படம் பேசுகிறது. நட்பை மையமாக இந்தப் படம் 90களில் நடப்பதாக ட்ரெய்லரின் காட்டப்படுகிறது. ஆங்கிலம் தெரியாததால் விசா மறுக்கப்படும் கதாபாத்திரங்கள், நாட்டின் எல்லையை சட்டத்துக்குப் புறம்பாக கடக்க முயற்சிக்கும்போது ஏற்படும் சிக்கல்களே படத்தின் கதை. ஷாருக்கான் வழக்கம் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். ராஜ்குமார் இரானியின் இயக்கம் என்பதால் வழக்கம்போல படத்தில் நகைச்சுவைக்கு இடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.