Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் சாதனை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ  இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் சூப்பர்ஹிட்டாக மட்டுமல்லாமல் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பிரபல இந்தியா டுடே இதழ் தெரிவித்துள்ளதாவது:

‘ஜவான் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் உரிமையை டி-சீரிசுக்கு விற்றதன் மூலம்,  250 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது.   தவிர, இயக்குநர்  அட்லீ உடைய இயக்கம் தென்னிந்திய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும்.

சமீபத்தில், தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “ஜவானில் விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ என அனைத்து தென்னக நட்சத்திரங்களும் பங்கு கொண்டுள்ளதால், இந்தப் படம் நிச்சயம் நல்ல வெற்றி பெறும். இவர்கள் அனைவரும் தென்னக பார்வையாளர்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலம், அவர்களை விரும்பும் தென்னிந்திய ரசிகர்களால், இந்தப் படம் தெற்கில் சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளது,” என்றார்.

அதே போல ​​திரைப்பட நிபுணர் ஸ்ரீதர் பிள்ளை முத்தாய்ப்பாக  ஒரு படி மேலே சென்று, “தென்னிந்தியக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டிருப்பதால், ஜவானின் முக்கிய சந்தையாகத் தென்னிந்தியா இருக்கும்” என்கிறார்.

தமிழ்நாட்டு உரிமை சுமார் 20 கோடிக்குப் போகலாம். அதே சமயம் கேரள உரிமைகள் 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மாநிலங்களில், தெலுங்குப் பதிப்பை விட, ஹிந்திப் பதிப்பு சிறப்பாகச் செயல்படும் என, ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவைப் பொறுத்தவரை, பெங்களூரில் SRK க்கு நல்ல சந்தை உள்ளது, மேலும் அங்குப் பட உரிமைகள் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையிலும் இத்திரைப்படத்தின் வர்த்தகம் வெகு உற்சாகமாகப் பேசப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். UFO Moviez India, Film Distribution இன் CEO பங்கஜ் ஜெய்சிங் கூறுகையில், ” SRK உண்மையில் பதான் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துள்ளார். இரண்டாவதாக, இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் எனப் பல  திறமைகள் இந்தப்படத்தில் உள்ளன. மூன்றாவதாக, ஆக்ஷன் திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன” என்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

 

 

- Advertisement -

Read more

Local News