Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘டைட்டானிக்-காதலும் கவிழ்ந்து போகும்’ படம் ஜூன் 24-ம் தேதி வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரான சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம் காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்’.

இந்தப் படத்தில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

பிற முன்னணி கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில்  ‘இயக்குநர்’ பாலாஜி மோகனும், நடிகை காயத்ரியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.  

‘தெகிடி’, ‘சேதுபதி’ புகழ் நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக ராம் பிரசாத்தும், படத் தொகுப்பை ராதாகிருஷ்ணன் தனபாலும் ’இக்னேசியஸ்’ அஸ்வினும் கவனித்துள்ளனர்.

இயக்குநர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய M.ஜானகிராமன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கோயமுத்தூர் கொடைக்கானல் பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இத்திரைப்படம் பற்றி படக் குழுவினர் கூறுகையில், “இப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக இருந்தாலும், நிச்சயம் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தின் பல இடங்களில் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி பார்க்க வைக்கும்.

அதுவும், climax’ல் வரும் சில திருப்புமுனைகள் இதுவரை Romantic comedy படங்களில் வராத அளவிற்கு இன்ப அதிர்ச்சியூட்டும்விதமாக திரைக்கதை அமைந்திருப்பது இப்படத்தின் பெரிய பலம்” என்றனர்.

கலகலப்பாக, அனைவரையும் கவரும் வகையில் தரமான நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ படம் வரும் ஜூன் 24-ம் தேதியன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News