Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

2600000 +! அசத்தும் ‘துணிவு’ டிரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெளியான ஒரே நாளில் துணிவு படத்தின் டிரெய்லர்  கால் கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது.

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.  படத்தின் டிரெய்லர்  நேற்று மாலை` 7 மணிக்கு வெளியானது. 

முன்னதாக படத்தின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் படி பத்திரிகையாளர் மைபா நாராயணன் என்ற கதாப்பாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடித்துள்ளார். நடிகர் பிரேம், பிரேம் என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கிறார். மேலும் நடிகர் பக்ஸ், ராஜேஸ் என்ற வேடத்திலும், நடிகர் ஜான் கொக்கென், கிரிஷ் என்ற வேடத்திலும் ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த வீரா, ராதா என்ற வேடத்திலும் நடிகர் ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற வேடத்திலும் தெலுங்கு நடிகர் அஜய், ராமசந்திரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர்.

சமுத்திரக்கனி இந்தப் படத்தில் தயாளன் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். மஞ்சுவாரியர் கண்மணியாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் படத்தைப் பகிர்ந்து அவரது பெயர் என்ன என்று யூகித்து சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அவரது ரசிகர்கள் ஏகே-வாக இருக்கும், விநாயக் மகாதேவாக இருக்கும் என தங்களது யூகங்களை பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், துணிவு படத்தின் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் கால் கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது, துணிவு பட டிரெய்லர்.

- Advertisement -

Read more

Local News