Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடன இயக்குநராக திரையுலகில் புகழ் பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படம் ‘தக்ஸ்.’

இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஹிந்தி நடிகர் ஹிர்ருது ஹாரூன் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த் மூவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் நடிகர் அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் ஆகியோரும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர இன்னும் ஏராளமான மண்ணின் மைந்தர்களை இந்த ‘தக்ஸ்’ படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிருந்தா மாஸ்டர்.

பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ‘தக்ஸ்’ படத்தில் மூன்று பிரபலமான முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், பத்திரிகை தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்த டைட்டில் லுக் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

‘தக்ஸ்’ என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப் பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார் பிருந்தா மாஸ்டர்.

தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News