மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பிசாசு 2’. இசை – கார்த்திக் ராஜா. படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகிவிட்டாலும், படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை.
இதற்கிடையில் ‘லியோ’, ‘மாவீரன்’ படங்களில் நடிக்க மிஷ்கின் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அவர், “விஜய் சேதுபதிக்காக கதை ஒன்றை எழுதி வருவருகிறேன். அது நிறைவடைந்ததும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், பிசாசு 2 படம் என்ன ஆனது என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.