Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 பேர் வெளியேற்றமா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட் ஆகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பான முறையில் இந்த வாரம் 2 பேரை வெளியேற்றத் திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இன்றோடு 62 நாட்கள் ஆகிவிட்டதால் இருப்பவர்களை கொஞ்சம், கொஞ்சமாக கழித்தால்தான் கடைசி வாரம் 2 பேர் இருக்க முடியும். இல்லாவிட்டால் கணக்கு உதைக்கும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

இதன் விளைவாக எப்போதும் வாரத்திற்கு ஒருவரை அனுப்பும் முடிவில் இருந்து இந்த வாரம் 2 பேரை அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்திருக்கிறாராம்.

இந்த முடிவின்படி இந்த வாரத்தின் முதல் நாளான இன்று ஜித்தன் ரமேஷும், நாளை அறந்தாங்கி நிஷாவும் வெளியேற இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜித்தன் ரமேஷ் எந்த குரூப்பிலும் மாட்டிக் கொள்ளவில்லை என்றாலும், எந்தப் பரபரப்பையும் செய்யவில்லை. இவர் இத்தனை நாட்களாக எப்படி உள்ளேயிருந்தார் என்பதே தெரியவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். அந்த அளவிற்கு பார்வையாளர்களின் ஆதரவைக் குறைவாகப் பெற்றிருந்தாலும் அவர் இருக்க வைக்கப்பட்டிருந்தார். இப்போது பிக்பாஸுக்கு தேவையில்லை என்பதால் வெளியில் தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

அறந்தாங்கி நிஷாவைப் பொறுத்தமட்டில் அவர் அர்ச்சனாவின் மிக நெருங்கிய நண்பியாகவும், அர்ச்சனா குரூப்பில் முக்கியமானவராகவும் இருப்பதால் அந்தக் குரூப்பீல் இருந்து ஒருவரை தூக்கி வீச வேண்டும் என்று பிக்பாஸ் டீம் முடிவெடுத்திருக்கிறது. இதில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டார் நிஷா. ஆக, நாளைக்கு ஒரு அழுவாச்சி காவியம் நமக்காகக் காத்திருக்கிறது எனலாம்..!

இருந்தாலும், நல்லவர்களெல்லாம் சீக்கிரமாக வெளியில் வருவது நல்லதுதான்..!

- Advertisement -

Read more

Local News