பஞ்சு அருணாசலம் அவர்களது அன்னக்கிளி திரைப்படம் மூலமாகத்தான் இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து திரைத்துறை செய்தியாளர், ரமேஷ் ஒரு வீடியோ பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர், “கதாசிரியர் செல்வராஜ்தான், பஞ்சுவிடம் இளையராஜாவை அழைத்துச் சென்றார். ‘இந்தப் பையன் நல்லா மியூசிக் பண்றான்.. வாய்ப்பு கொடுங்க’ என்றார்.
அதற்கு பஞ்சு, ‘நாளைக்கு உன் ட்ரூப்போட வந்து ஏதாவது பாட்டுப் பாடி காண்பிச்சுரு.. பார்க்கலாம்’ என்றார்.
அதற்கு இளையராஜா, ‘ட்ரூப் எல்லாம் எதுக்கு.. இப்பவே பாடிக்காட்டுறேன்’ என்றார்.
பஞ்சு, ‘ஆர்கெஸ்ட்ரா இல்லாம எப்படி பாடுவே’ என கேட்க, ‘இந்த டேபிள் போதுமே’ என்று டேபிளை தட்டி பாட ஆரம்பித்து இருக்கிறார் இளையராஜா.
அதி அற்புதமான இசை. இதைக் கேட்டு மயங்கிய பஞ்சு அருணாசலம் உடனடியாக அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு அளித்துவிட்டார்” என்றார் பத்திரிகையாளர் ரமேஷ்.
பஞ்சு அருணாசலத்திடம் கதைசிரியர் செல்வராஜ் கூப்பிட்டு வந்தார் இந்த பையன் நல்லா மியூசிக் போடுவான்
நாளை ஆர்கெஸ்ட்ரா வச்சு பாடிக்காட்டு
இந்த டேபிள் போதும்