கடந்த 2௦19-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விஜே கோபிநாத்தே இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் தம்பி ராமையா பேசும்போது, “பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முன் இரண்டு படங்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கும். ஆனால் இந்த ‘ஜீவி-2’ படக் குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டனர். நாயகன் வெற்றி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அதில் நிச்சயமாக ஏதாவது இருக்கும் என நம்பலாம். இந்தப் படம் உயரத்தை தொடுமா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்கு துயரத்தை தராது என்று தாராளமாக சொல்லலாம்.” என்றார்.