Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

சிவாஜியை பற்றி தெரியமாமலே போன விசயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்ததாவது:

“பொதுவாக சிவாஜி கணேசன் என்றால் மிக சிக்கனமானவர்.. எளிதில் யாருக்கும் உதவி செய்துவிட மாட்டார் என்கிற பிம்பம் உண்டு. ஆனால் அள்ளிக்கொடுப்பதில் அவரை மிஞ்ச முடியாது.

அவரது நாடகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வீரபாண்டிய கட்டபொம்மன். இந்த நாடகம் நூற்றுக்கும் அதிகமான தடவை மேடையில் அரங்கேற்றப்பட்டது. அப்போது நாடக கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்தது போக, மீதம் இருந்த 32 லட்சத்தை தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு வழங்கினார்.

தவிர, மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போதும் அள்ளிக்கொடுத்து இருக்கிறார்.   ஆனால் தான் செய்த உதவிகளை இவர் விளம்பரப்படுத்திக் கொள்ள வில்லை” என்றார்.

 

 

- Advertisement -

Read more

Local News