Friday, April 12, 2024

கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படம் ‘திடல்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் ‘திடல்’ படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டரை ‘ராட்சசன்’ படத்தின் இயக்குநரான ராம்குமார் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் கதையை எழுதி முக்கிய பாத்திரத்தில் நடித்ததுடன் இ்ல்லாமல், தனது கிரவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் படத்தையும் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் P.பிரபாகரன். 

இப்படத்தில் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ், கர்ணா என 5  நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். மற்றும் முக்கியமான ஒரு திருப்புமுனைக் கதாபாத்திரத்தில் வினோதினி  நடித்திருக்கிறார்.  முக்கிய பாத்திரங்களில்  ராட்சசன்’ கிறிஸ்டோபர்,  சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு – சேகர் ராம், ஜெரால்டு, இசை – ஸ்ரீசாய் தேவ்.வி. இவர் தெலுங்கில் 3 படங்கள், கன்னடம் 2, தமிழில் 4 படங்களுக்கு இசையமைத்துள்ளார். படத் தொகுப்பு – ரோஜர், கலை இயக்கம் – சிவா, நடன இயக்கம் – ஜாய் மதி, சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ்.

இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன். இவர் இயக்குநர் சுகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர். மேலும் பல படங்களில் பணியாற்றியவர். ஏராளமான குறும்படங்கள் எடுத்தவர். ஒரு ஷார்ட் பிலிம் மேக்கராக பரவலாக அறியப்பட்ட இவர், தனது குறும்படங்களுக்காக 7 விருதுகளை பெற்றிருப்பவர்.

இந்தத் திடல்’ படம் பற்றி இயக்குநர் கார்த்திக் கண்ணன் பேசும்போது, “இந்தத் ‘திடல்’ திரைப்படம், ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை.

1-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்புவரை ஒன்றாகப் படித்திருந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கப்படுத்துகிறார்கள். 

இதனால் அவர்கள் பக்கத்து ஊர்களுக்கு விளையாடப் போக… அங்கும்  புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் தங்களுக்கான ஒரு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் தேடுகிறார்கள். அவர்களுக்கான விளையாட்டுத் திடல் கிடைத்ததா.. இல்லையா… என்பதுதான் படத்தின் கதை…” என்றார்.

தனது சிஷ்யன் இயக்கியிருக்கும் இந்தத் ‘திடல்’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ராட்சசன் படத்தின் இயக்குநரான ராம்குமார் வெளியிட்டார்.

இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News