சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஷாம், தான் ரசித்து சிரித்த விசயத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்:
“கொரோனா நேர முழு ஊரடங்கு நேரத்துல எல்லோரையும் போலவே எனக்கும் பொழுது போகலை.. என் நண்பர்களுக்கும் அப்படித்தான். ஒரு முறை கான்பரன்ஸ் காலில் நண்பர்களுடன் பேசும்போது, ஜாலியா சீட்டு விளையாடலாம் என முடிவெடுத்தோம். இதனால் நண்பர்கள் சிலர் என் வீட்டு வந்தார்கள். பணம் வைத்து விளையாடும் பழக்கம் எங்களுக்கு இல்லை. டைம் பாஸ்க்காக விளையாடினோம்.
ஆனா பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர், நாங்கள் காசு வைத்து சூதாடுவதாக காவல்துறைக்குச் சொல்ல. அவர்கள் வந்து பார்த்து, அப்படி இல்லை என தெரிந்து சென்று விட்டார்கள்.
இதை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும். விளையாட்டான ஒரு விசயத்தை சிலர் இப்படி சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்களே என்று” என தெரிவித்தார் ஷாம்.