சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படத்தை ஜே.டி – ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவலும் கசிந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில்ன் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இதில் நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசியதாவது: “எந்தவொரு நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில்தான் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் இந்த வியாபாரத் துறை மிகமுக்கிய பங்காற்றி வருகிறது. நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால், நம் நாட்டின் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்துக்கு அதில் இருக்கும் உண்மைத்தன்மையும், கடின உழைப்பும் தான் முக்கிய காரணமாக இருக்கும்.
இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா மிக சிறப்பாக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில், காக்கா, கதைகள், இவருக்கு அந்த பட்டம், அவருக்கு இந்த பட்டம் இதில் எல்லாம் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயரமுடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும்.என்று லெஜண்ட் சரவணன் பேசினார்.