Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“மஹா’ படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகாவின் நடிப்பில், ‘மஹா’ என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இயக்குநர் உபைத் ஹர்மான் ஜமீல் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்துள்ளார்.

தற்போது படம் முழுவதும் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஆனால், கொரோனா லாக் டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைத் திரையிடும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குநரான ஜமீல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், இந்தப் படத்தை இயக்குவதற்காக 27.07.2018 அன்று போடப்பட்ட ஒப்பந்தப்படி தனக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும், ஆனால் இதுவரையிலும் தனக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதால், இன்னமும் 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பாக்கியாக தர வேண்டியிருக்கிறது.

மேலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாசிரியரான தனக்கே தெரியாமல் கதைகளில் மாற்றம் செய்து உதவி இயக்குநரான விஜய் என்பவரின் இயக்கத்தில் படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள்.

இதனால் தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதுவரையிலும் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்..”  என்று இயக்குநர் ஜமீல் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநர் ஜமீல் புகார் கொடுத்ததையடுத்து  இயக்குநர் சங்கத்தில் நடந்த சமரசப் பேச்சில், 18.02.2021 அன்று இயக்குநர் ஜமீலுக்குத் தரப்பட வேண்டிய  ஊதிய பாக்கி தொகையான 5,50,000 (ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) வங்கி டிமாண்ட் டிராப்ட்டாக இயக்குநர் சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சமரசப் பேச்சின்படியே இயக்குநர் ஜமீல் மீதமுள்ள  படப்பிடிப்பையும், படத் தொகுப்புப் பணியையும் தயாரிப்பாளரின் விருப்பப்படி முடித்து தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால் இந்த ‘மஹா’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குநர் ஜமீலுக்கு அவரது ஊதியத் தொகையான ரூபாய் 5,50,000 ( ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) ஒப்பந்தப்படி வழங்கப்படும்…” என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, “படத்தின் முழுமையான பதிப்பு, பண முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கே தனி உரிமையானது. மேலும் இயக்குநரும், தயாரிப்பாளரும் 27.07.2018 அன்று செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் தலைப்பு, படத்தின் உருவாக்கம் முதலிய எதிலும்,   இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை.

இதன்படி இந்தப் படத்தின் மீது தடை கோரும் உரிமை இயக்குநர் ஜமீலுக்கு இல்லை. இதனால் தடை கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது..” என்று கூறி தீர்ப்பளித்தார்.

- Advertisement -

Read more

Local News