பிரபல தயாரிப்பாளரான மறைந்த பாலாஜிக்கு ஒரு கட்டத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த படத்தை தயாரிக்க பைனான்ஸ் வேண்டி வேலையுதம் என்கிற பைனான்சியரை அணுகினார். இவர் வேறு யாருமல்ல.. கே.ஆர்.விஜயாவின் கணவர்.
வேலாயுதமோ, “ஏ.சி. திரிலோக சந்தரை இயக்குநராக போட்டு படம் எடுப்பதாக இருந்தால், பணம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டார்.
ஏசி திருலோகசந்தர் அப்போது பிரபலமான இயக்குநராக விளங்கினார். அவருக்கான சம்பளத்தை தன்னால் தர முடியமா என பாலாஜி யோசித்தார்.
தனது நண்பரான ஏவிஎம் சரவணன், ஏ.சி.திருலோக சந்தருக்கும் நண்பர் என்பது பாலாஜிக்கு தெரியும். ஆகவே அவர் மூலமாக அணுகலாம் என முடிவு செய்தார்.
சரவணனிடம், “நீங்கள் சொன்னால் திருலோகசந்தர் கேட்பார். சம்பளத்தை குறைத்துப் பேசுங்கள்” என்றார்.
அதன்படியே நடந்தது.
அப்படி ஏ.சி.திருலோக சந்தர் இயக்கி, சிவாஜி சரோஜாதேவி ஜோடியாக நடித்த என் தம்பி.
இது . மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்துதான் பாலாஜி, தொடர்ந்து பல படங்களை தயாரிக்க அஸ்திவாரமாக விளங்கியது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..