Zee தொலைக்காட்சியில் 2021 ஆகஸ்ட் முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் 1400 எபிசோடுகளை கடந்துள்ளது.இந்தத் தொடரில் ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஸ்வாதியின் அழுத்தமான நடிப்பு இத்தொடருக்கான கூடுதல் வலுவை சேர்த்து வருகிறது. இவர் இத்தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடர் விரைவில் நிறைவடையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


