Friday, April 12, 2024

செவிலியர்களின் வாழ்க்கைக் கதைதான் ‘செவிலியர் கடவுள்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தருமபுரி  டாக்டர் வே.சரவணன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘செவிலியர் கடவுள்’.

இந்தப் படத்தின் நாயகனாக விஷ்ணு ப்ரியன் நடிக்கிறார். இவர்  ‘மை’, ‘மெர்லின்’, ‘இலக்கணம்’ ஆகிய படங்களில் நடித்தவர். நாயகியாக வண்ணத் தமிழ்’ சூர்யா நடிக்கிறார். இவர் பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர்களுடன் ‘திருப்பாச்சி’ பெஞ்சமின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அனிஸ் சாலமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் படத் தொகுப்பு செய்கிறார்.  

அறிமுக இயக்குநரான குணாஜீ இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் ‘ஜனநாயகக் கொலை’,  ‘திருப்பி அடி’ ஆகிய குறும் படங்களை இயக்கியவர்.

கொரோனா சமயத்தில் தங்கள் உயிரை துச்சமாக எண்ணி மக்கள் சேவை ஆற்றிய உலக செவிலியர்களை பெருமைப்படுத்தும்விதமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

உலகத்திலேயே ஆகச் சிறந்த மருந்து ‘அன்பு’ என்பதுதான் படத்தின் மையக் கரு. அதே சமயம் கொரோனாவைவிட கொடியவர்கள் மனிதர்கள் என்பதையும், எல்லா மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்பதை கருத்தியல் படமாக இல்லாமல்  கமர்ஷீயல் படமாகவும் உருவாகவுள்ளது.

கொரோனா சமயத்தில் குடும்பத்தை பிரிந்து பல மணி நேரம்  கஷ்டமான கவச உடை அணிந்து சேவை ஆற்றிய செவிலியர்களின் கடமையையும், தியாகத்தையும் இந்தப் படத்தில் அழுத்தமாக பதிவு செய்யவுள்ளார்கள்.

படம் குறித்து இயக்குநர் குணாஜீ பேசும்போது, “வெள்ளுடை தரித்த மானுட கடவுளான மருத்துவர்களையும், செவிலியர்களையும் இந்தப் படம் மேன்மைப்படுத்தும். ஒரு படைப்பாளியாக  இந்தப் படத்தை இயக்குவதில் நான் பெருமை கொள்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News