Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“SPB-க்கு மணிமண்டபம் கட்டப்படும்” – அவரது மகன் சரண் அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம் கட்டவுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகத்தின் பிரபலமான பாடகரான பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சென்ற ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று எஸ்.பி.பியின் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் வந்தார்கள். கூடினார்கள். ஆனால், யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மட்டுமே தோட்டத்தின் உள்ளே சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் பின்பு எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரண் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “தற்போதைய கொரோனா சூழலால் காவல் துறையினர் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான் அவரது ரசிகர்களை எங்களால் உள்ளேவிட முடியவில்லை.

தெலுங்கில் 22 ஆண்டுகளாக அப்பா நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியை இப்போது நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என்று சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

அப்பாவுக்கு என்ன பண்ணப் போகிறோம் என்றால், முதலில் அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருக்க வேண்டும். அடுத்து இங்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டு வருகிறோம். அதில் ஓவியங்கள் வரைய வேண்டும். மியூசியம், திரையரங்கத்தைக்கூட  கட்ட திட்டமிட்டுள்ளேன்.

இதெல்லாம் ஓராண்டில் முடியக் கூடிய வேலையில்லை. அந்த வேலைகள் எல்லாம் எப்போது முடியும் என்று சொல்ல முடியவில்லை. கண்டிப்பாகக் கூடிய விரைவில் வேலைகளைத் தொடங்கவுள்ளோம்.

இதுவரை தமிழக அரசிடமிருந்து இதற்காக எந்தவொரு உதவியையும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து வேலைகளையும் ஓவியங்களாக வரைந்து கொண்டு போய் தமிழக அரசிடம் காட்டவுள்ளேன்.

எஸ்.பி.பி. தொண்டு நிறுவனம் மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம். மீதமுள்ளதை தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்ற எண்ணமும் எங்களிடம் உள்ளது…” என்றார்.

- Advertisement -

Read more

Local News