Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘விக்ரம்’ படத்தை இணையத்தளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் விக்ரம்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “எங்களது விக்ரம்’ படம் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானால் எங்களுக்கு மிகப் பெரும் அளவுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்” என்று கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்ரம்’ படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக அனைத்து இணைய வசதிகளைத் தரும் டெலிகாம் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

விக்ரம்’ படம் அடுத்த வார வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில், விரைவில் படத்திற்கான முன் பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ‘விக்ரம்’ படத்தின் முதல் நாளின், முதல் காட்சிக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

Read more

Local News