நடிகை நித்யா மேனன், ஆந்திர மாநிலம் திருப்பதி அருகில் உள்ள வரதயா பாளையத்தில், கல்கி பகவான் ஆசிரமத்துக்கு அவ்வப்போது சென்று வருவார்.
சமீபத்தில் அந்த ஆசிரமத்திற்கு வந்த அவர், சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின் அதன் அருகிலுள்ள பழங்குடியினர் கிராமத்துக்குச்சென்றார்.

அங்கு அரசு தொடக்க பள்ளிக்குச் சென்ற அவர், மாணவர்களைச் சந்தித்தார். அவர்களுடன் உரையாடிய பிறகு, ஆங்கிலப் பாடம் கற்றுத்தந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.