தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடிய ராஜலட்சுமி செந்தில், சினிமாவில் சின்ன மச்சான் பாடல் பாடி பிரபலமானார். தொடர்ந்து பல பாடல்கள் பாடி இருக்கிறார்.
இந்த நிலையில் கணபதி பாலமுருகன் இயக்கிய ‘லைசென்ஸ்’ என்ற படம் மூலம் ராஜலட்சுமி செ தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இதில் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பள்ளி ஆசிரியையாக அவர் நடிக்கிறார். ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா, அனன்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இது குறித்து அவர், “இயக்குனர் என்னிடம் இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை கண்டு வியந்து போனேன். 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்பது ஆச்சரியமான விஷயம்” என்றார்.