இன்று தமிழின் மிக முக்கிய நாயகர்களில் ஒருவர் கார்த்தி. தான் போட்ட முதல் ஆட்டோகிராப் பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
“அப்போது நான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகளுக்கு திருணம். அங்கு மணமக்களுக்கு மேடை அமைத்தது போலவே, வருகிற வி.ஐ.பி.க்களுக்கும் தனி நேடை அமைத்திருந்தனர். மணிரத்னம் சார் அந்த மேடையில் உள்ள இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டார். நானும் அவர் பின்னால் நின்றிருந்தேன். மணிரத்னம் சார் உட்காரச் சொல்லவே நானும் பின் இருக்கையில் அமர்ந்தேன்.
அப்போது கூட்டமாக வந்த சிலர், மணிரத்னம் சாரிடம் ஆட்டோ கிராப் வாங்கினார்கள். திடீரென சிலர் என்னிடமும் ஆட்டோ கிராப் கேட்க.. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஆனாம் மணிரத்னம் சாரே, ஆட்டோ கிராப் நோட்டை வாங்கி என்னிடம் கொடுத்தார். எனக்கு வெட்கமாக போய்விட்டது. அவர் எவ்வளவு பெரிய இக்குநர்.. இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரே என நினைத்தேன்.
நான் போட்ட முதல் ஆட்டோகிராப் அதுதான்” என்று கூறியிருக்கிறார் கார்த்தி.