இப்போதெல்லாம் கவர்ச்சிக் காட்சிகள் எல்லை மீறி போகின்றன. அதுவும் ஓ.டி.டி. வந்ததில் இருந்து சென்சார் இல்லாத காட்சிகள் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன.
இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது, 1933 ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்டஸி என்ற ஆங்கிலப் படம்தான். இதில்தான் உலகத்திலேயே முதல் முதலில் படுக்கை அறை காட்சி இடம்பெற்றது. ஆஸ்திரேலியா நடிகை எட்டி லாமர் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.
மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலேயே சில காட்சிகள் தடை செய்யப்பட்டன.
அது மட்டுமல்ல கு இது போன்ற காட்சிகள் எடுக்கவும் கூடாது என அந்நாடுகளில் சட்டம் விதிக்கப்பட்டது. ஆனால் 1940 இல் அந்த சட்டம் திரும்பப்பெறப்பட்டது.