Thursday, April 11, 2024

எதிர்ப்பு எழுந்த படம்.. மிகப்பெரிய வெற்றி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்படங்களுக்கு  எதிர்ப்பு வருவது புதிய விசயமல்ல. 1934 ஆம் ஆண்டு பாபுராவ் பெண்டார்க்கர் – கே.ராம்நாத்  இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சீதா கல்யாணம்” ஆகும்.

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து அந்த “சீதா கல்யாணம்” திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜனக மகாராஜாவாக சுந்தரம் ஐயர்.  இவர், பின்னாட்களில் பெரிய இயக்குநர் என பெயர் பெற்ற வீணை எஸ்.பாலசந்தரின் தந்தை.

இந்த திரைப்படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரரும் சுந்தரம் ஐயரின் மூத்த மகனுமான எஸ்.ராஜம்.

சீதையாக நடிக்க சரியான நடிகை அமையவில்லை. பிறகு யோசித்து சுந்தரம் ஐயரின் மூத்த மகளையே சீதையாக நடிக்க வைத்தனர். அதாவது வீணை எஸ்.பாலசந்தரின் சகோதரி.

அதாவது அண்ணனும் தங்கையும் ராமர் – சீதையாக நடித்தனர்.

இந்தத் தகவல் பரவ, “அதெப்படி சகோதர சகோதரி ராமர் – சீதையாக நடிக்கலாம்” என பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் திரைத்துறையில் மிகுந்த ஈடுபாடுள இவர்கள் அது குறித்து கவலைப்படாமல் படப்பிடிப்பை முடித்தனர்.

படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

ஆக சிலரின் எதிர்ப்புக்கும், படத்தை மக்கள் கொண்டாடுவதற்கும் சம்பந்தமில்லை!

- Advertisement -

Read more

Local News