Thursday, April 11, 2024

சிவாஜியிடமே டேக் வாங்கிய இயக்குநர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1992ம் வருடம்சிவாஜி கணேசன், கமல்ஹாசன், கௌதமி, ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் “தேவர் மகன்”.  கமல்ஹாசனின் திரைப்பயணத்திலேயே காலத்துக்கும் பேசப்படும் கல்ட் கிளாசிக் திரைப்படமாக “தேவர் மகன்”அமைந்தது. சூப்பர் டூப்பர் ஹிட்.

இப்படத்தை இயக்கியவர் பரதன். மலையாளத்திலும் தமிழ் மொழியிலும் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

தேவர் மகன் திரைப்படம் ஆஸ்காருக்கும் அனுப்பப்பட்டது. இன்று வரை சினிமா ரசிகர்களால் சிறந்த திரைக்கதைக்காக போற்றப்படும் திரைப்படமாக “தேவர் மகன்”  கூறப்படுகிறது.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்தான ஒரு சுவாரஸ்ய சம்பவம்  ஒன்றை கமல்ஹாசன்,  பகிர்ந்துள்ளார்.


“தேவர் மகன்”  படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. அப்போது ஒரு நாள் பரதன், ‘சிவாஜி சார் நடித்தது நன்றாக இல்லை, ஒன்ஸ் மோர் போகலாம்’ என என்னிடம் கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  ‘அவரிடம் சென்று நல்லா இல்லை என எப்படி கூறமுடியும்?’ என கேட்டேன்.

அதற்கு பரதன், ‘சொல்லனுமே, எனக்கு பிடிக்கலையே’ என்றார்.

இதைப் பார்த்த சிவாஜி, ‘என்னங்கடா ஏதோ பேசிகிட்டே இருக்குறீங்க. சொல்லித் தொலையுங்களேன்டா’  என கத்தினார்.  நாங்கள் ஒன்றும் பேசவில்லை.  பிறகு அவரே, ‘ நான் நடிச்சது நல்லா இல்லையா?’ என  கேட்டார்.  அதற்கு பரதன் ‘ஆமாம் சார்’ என்று தைரியமாக கூறிவிட்டார்.

உடனே சிவாஜி, ‘அதைச் சொல்ல வேண்டியதுதானே.. டைரக்டர் சொன்னதை நடிக்கவேண்டியதுதானே என் வேலை.. சரி எப்படி நடிக்கணும் சொல்லு’ என்று கேட்டு, இயக்குநர் பரதன் கூறியபடி நடித்தார்.

அவர் எவ்வளவு பெரிய நடிகர்.. இவ்வளவு சிம்பிளாக எடுத்துக்கொண்டாரே.. என அதிசயித்துவிட்டோம்” என்று நெகிழ்ந்து கூறினார் கமல்.

- Advertisement -

Read more

Local News