Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

நடிகர் திலகத்திடமே அதிரடி காட்டிய இயக்குநர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிப்புக்கு  இலக்கணம் என்றால் நடிகர் திலகம் சிவாஜியைத்தான் தமிழ்த் ததிரையுலகம் சொல்லும். நடிப்பால் அனைவரையும் மிரட்டி விடுவார். நிஜத்திலும் அவரைப் பார்த்து மிரண்டுதான் போயிருந்தனர் தமிழ் திரையுலகினர். அது அவருக்குக் கொடுத்த மரியாதையே.

ஒரு முறை இயக்குநர் வாசுவுக்கு, சிவாஜியை இயக்கும் வாய்ப்பு வந்தது. சிவாஜியிடம் கதை சொல்ல அவரது வீட்டுக்குச் சென்றார் வாசு.

வாசுவை கதை சொல்லச் சொன்ன சிவாஜி, அருகில் இருந்த டி.வி.யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது, வாசு சொல்வதற்கு ம் கொட்டிக்கொண்டு   இருந்தார்.

திடீரென கதை சொல்வதை வாசு நிறுத்திவிட்டார். ஏன் என்று சிவாஜி கேட்க, “டிவி பார்த்துக்கொண்டே கதை கேட்டால் மனதில் பதியாது.. அதற்காகத்தான்” என்று இழுத்திருக்கிறார் வாசு.

டென்சன் ஆன சிவாஜி, “ யாரைப் பார்த்து இப்படிச் சொல்லுறே..  தூங்கிட்டு இருக்கிறப்போ கதை சொன்னாலும் மனசுல பதிய வச்சுக்குவேன்” என சொல்ல, தொடர்ந்து கதை சொல்லி இருக்கிறார் வாசு. பிறகு சிவாஜி, “என்னைப் பார்த்து தயங்காமல், டிவியை நிறுத்திட்டு கதையைக் கேள்னு சொன்னியே.. அதைப் பாராட்டுறேன். அதான் உன் கம்பீரம்” என சொல்லி பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News