Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“என்னை எதிர்த்தவர்களின் டெபாசிட்டே பறி போய்விட்டது…” – நடிகர் ராதாரவியின் கிண்டல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் என்னை எதிர்த்தவர்களின் டெபாசிட்டே காலியாகிவிட்டது..” என்று நடிகர் ராதாரவி கிண்டல் செய்துள்ளார்.

நேற்றைக்கு நடைபெற்ற டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, “நான் குடும்பமாக நினைக்கும் பெப்சியை சேர்ந்தவர்கள் இங்கு வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்று பெப்சி நல்ல நிலைமையில் இருக்க செல்வமணி முக்கிய காராணம்.

அவர் எனக்கு ஒரு அறிவுரை சொன்னார். “சங்கத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அனைவரையும் கூப்பிட்டு பேசுங்கள்…” என்றார் அது தவறு. பிரச்சனை என்பது வந்தவுடன் போய்விடும். அதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது. பிரச்சனையுடன் உறவாடக் கூடாது. என்னை எதிர்த்தவர்களால்தான் என் நிலை இங்கு என்ன என்பது இன்று எனக்கு தெரிந்துள்ளது, அதனால் அவர்களுக்கு நன்றி.

இந்த சங்கத்தில் நான் பார்த்து சேர்த்தவர்கள்தான் என்னை எதிர்த்து கேஸ் போட்டார்கள். இப்போது எங்களை எதிர்த்து நின்றவர்கள் எல்லோருக்குமே டெபாசிட் போய்விட்டது.

டைரக்டர் யூனியனிலே பிரச்சனையா…? அப்போ டப்பிங் யூனியனிலும் இருக்கும்பா என்கிறார்கள். “நாய் குலைக்குதேன்னு சிங்கமும் குலைக்க முடியாது”. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இயக்குநர் சங்கத் தேர்தல் குறித்துக் கேள்விப்பட்டு நான் பெரிதும் வருத்தப்பட்டேன். நம்முடன் நிறைய வல்லவர்கள் இருக்கிறார்கள். செல்வமணி நிச்சயமாக இந்தத் தேர்தலில் ஜெயிப்பார். யாரும் கவலைப்பட வேண்டாம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News