Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

எம்.ஜி.ஆர் வாழ்வில்  நடந்த மிகப்பெரிய சோகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, திரையுலகிலும் முக்கிய ஆளுமையாக விளங்கியவர் மறைந்த எம்.ஜி.ஆர்.

ஆரம்பகாலத்தில் அவர் நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்குபார்கவி என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவருக்கு தங்கமணி என்கிற பெயரும் உண்டு.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. ஜப்பான் நாட்டு விமானங்கள் சென்னையில் குண்டு வீசப்போகிறது என தீயாக செய்திகள் பரவியது. எனவே, மக்கள் பீதியில் இருந்தனர். எம்.ஜி.ஆரும், அவரின் சகோதரர் சக்கரபாணியும் தங்கள் மனைவிகளை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சொந்த ஊருக்கு சென்ற பார்கவி மாரடைப்பில் மரணமடைந்தார். மனைவி இறந்துபோன செய்தி கேட்டு எம்.ஜி.ஆர் துடிதுடித்துப்போனார். எம்.ஜி.ஆர் அங்கு செல்வதற்கு முன் பார்கவியை அடக்கம் செய்துவிட்டனர். இதனால் கடைசியாக தனது மனைவியின் முகத்தை கூட அவரால் பார்க்க முடியாமல் போனது. இந்த சோகம் எம்.ஜி.ஆரை பெரிதும் பாதித்தது. அவரை அவரின் அன்னை சத்யாவும், சக்கரபாணியும் தேற்றினர்.

பார்கவி 1942ம் வருடம் மரணமடைந்தார். அதாவது எம்.ஜி.ஆரின் முதல் திருமண வாழ்க்கை 4 வருடங்கள் மட்டுமே நீடித்தது. அடுத்து அவர் சதானந்தவதி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் காசநோயால் பாதிக்கப்பட்டு 1962ம் வருடம் மரணமடைந்தார். சதானந்தவதி நோய்வாய் பட்டு படுக்கையில் இருந்தபோதே அவரின் சம்மதத்துடன் ஜானிகியை எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தனது இரு மனைவிகளின் மரணங்களே தன்னை மிக பாதித்ததாக ஒரு முறை எம்.ஜி.ஆர். பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News