‘அனிமல்’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, தற்போது பிரபாஸை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக படப்பிடிப்பு முடிந்து, காட்சிகள் எடிட் செய்யப்பட்ட பிறகு தான் பின்னணி இசை அமைக்கப்படும். ஆனால் ‘ஸ்பிரிட்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இயக்குநர் சந்தீப் கூறிய காட்சிகளின் கிரியேட்டிவான கற்பனை அடிப்படையில், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்முன் பின்னணி இசையை தயாரித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இது திரைப்படத்தின் காட்சிகளின் தாக்கத்தை இன்னும் வலுப்படுத்தும் என்றும், மேலும் படத்தின் தரம் கூடும் என்றும் இயக்குநர் நம்புகிறார். இதுவரை யாரும் முயற்சி செய்யாததை முதல் முறையாக சந்தீப் ரெட்டி வாங்கா செய்கிறார்.