சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி – அனுஜா நடித்த, சைக்கிள் காமெடி மிகவும் பிரபலமானது. இது குறித்து அனுஜா, “அந்த காட்சியில் கவுண்டமணி, கண்களை மூடிக்கொண்டு சைக்கிளை ஓட்டி வர வேண்டும். அவருடன் நடிக்க பயந்தேன். காரணம் அதற்கு முன் ஒரு காட்சியில் என்னை தண்ணீரில் நிஜமாகவே தூக்கிப் போட்டு விட்டார். அதில் இருந்த கற்கள் குத்தி எனக்கு காயம் ஏற்பட்டது” என்று அனுஜா தெரிவித்தார்.