Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

விஜயையே டார்ச்சர் செய்த நடிகர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜயையே டார்ச்சர் செய்த நடிகர் ஒருவர் உண்டு. அவரே இதொ ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

அவர் ஜெய்.

இதோ அவரது மொழியிலேயே..

“விஜய்க்கு நான் தம்பி முறை. ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நாயகனாக தோன்ற..  ரீமா சென், வடிவேலு, நான் எல்லோரும் நடித்தோம்.  விஜயின் தம்பியாக நடித்தேன்.  இது எனது முதல் படம் என்பதால் விளையாட்டுத்தனமாகவே இருந்தேன். ஆக்ஷன் என இயக்குநர் கூறியவுடன், என்ன ஆங்கிள் எனக் கேட்பேன்.  கேமராவை பாருப்பா  என அவர் கூறினால் எதிர் திசையில் முகத்தைத் திருப்புவேன்.

இதெல்லாம் விஜய்க்கு ரொம்ப டார்ச்சர் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில், இவன் ரொம்ப சேட்டை செய்யறானே.. வேற ஆளை நடிக்க வச்சிரலாமா என விஜய் நினைக்கும் அளவுக்கு போய்விட்டது.  ஆனால் அதற்குள் படப்பிடிப்பே முடிந்துவிட்டது” என்று சொல்லி சிரித்தார் ஜெய்.

- Advertisement -

Read more

Local News