காலத்தால் அழியாத பாடல்களை அளித்தவர், வெண்கல குரலோன் சீர்காழி கோவிந்தராஜன். . சில திரைப்படங்களில் அவர் நடிக்கவும் செய்துள்ளார்.
அப்படி அவர் நடித்த படங்களுள் ஒன்று, கந்தன் கருணை. இதில் நக்கீரராக நடித்து இருப்பார்.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார்.
காரணம், திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனே, அதில் நக்கீரன் வேடத்தில் நடித்து இருப்பார். மக்கள் மனதில் பதிந்த கதாபாத்திரங்களில் அதுவும் அன்று.
கந்தன் கருணை படத்தையும் அவரே இயக்கினார். ஆனால் நக்கீரன் வேடத்துக்கு சீர்காழி கோவிந்தராஜனை அணுகினார்.
அப்போதுதான் கோவிந்தராஜன், “அய்யோ அந்த வேடத்தில் நானா.. ஏற்கெனவே திருவிளையாடல் படத்தில் அற்புதமாக நடித்து அசத்திவிட்டீர்கள். அந்த வேடத்தில் இப்போது நான் நடித்தால் என்ன ஆகும்” என மறுத்தார்.
அதற்கு ஏ.பி.நாகராஜன், “திருவிளையாடல் படத்தில் நக்கீரன் வேடத்துக்கு வசனங்கள்தான் பிரதானம். ஆனால் இந்தப் படத்தில் பாடல்தான் முக்கியம். இரண்டு கதாபாத்திர தன்மைகளும் வேறு வேறு. நீங்கள் அசத்திவிடுவீர்கள்” என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்.
இன்னொரு விசயம்.. சீர்காழி கோவிந்தராஜன் நடித்த முதன் முதல் நடித்தது இந்த கந்தன் கருணை படம்தான் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு முன்பே ஒரு படத்தில் அவர் நடித்தார்..
அந்த படம் எது.. ஏன் அந்த படத்தை பலரும் குறிப்பிடுவது இல்லை..
இந்தத் தகவலையும் இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளையும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..