Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஜோதிடர்களை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸீ டி.வி.யில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் vs மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் மாரிமுத்து கலந்து கொண்டிருக்கிறார்.

திரைப்பட இயக்குநராக விளங்கிய இவர், தற்போது டி.வி. சீரியர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமான இவர், தற்போது இவர் ஜெயிலர், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ‘சந்திராஷ்டமம் அன்று செல்பி எடுத்து டெலிட் செய்து விட்டால் அந்த நல்ல நாளாக இருக்கும்’ என்று ஜோதிடர்கள் சொன்னார்கள்.

உடனே  மாரிமுத்து “கொரோனா வரும்போதும், சென்னையில் வெள்ளம் வரும்போதும் எந்த ஜோதிடமும் எதுவுமே சொல்லவில்லை. அதோடு ஸ்டாலின் முதல்வராகவே வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள். ஆனால், இன்று அவர் முதல்வராகிவிட்டார். இதையெல்லாம் ஏன் நீங்கள் சொல்லவில்லை? அதை விட்டு தேவையில்லாததெல்லாம் சொல்கிறீர்கள்” என்று பாய்ந்துவிட்டார்.

தற்போது இது தொடர்பான புரோமோ தான் வெளியாகியிருக்கிறது. இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News