பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருந்த ‘தள்ளிப் போகாதே’ படம் இப்போது கடைசியாக டிசம்பர் 3-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் வெளியான ‘நின்னு கோரி’ என்ற படம் தமிழில் ‘தள்ளிப் போகாதே’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்டம் திரைக்கு வரத் தயாராக உள்ள நிலையில் இதற்கடுத்த படமாக ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கையும் படமாக்கி முடித்துவிட்டார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
இந்நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் இந்தப் படம் குறிப்பிட்ட அந்தத் தேதியில் வெளியாக முடியாமல் போனது.
தற்போது இப்படம் வருகிற டிசம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நாளிலாவது தள்ளிப் போகாமல் இந்த ‘தள்ளிப் போகாதே’ வெளியாகட்டும்..!