Thursday, April 11, 2024

தளபதி 67 அப்டேட்: ரசிகர்கள் அப்செட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிக்கும் புதிய படமான தளபதி 67 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்கி வருகிறார். இதில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் விஜய்க்கு மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, சண்டை பயிற்சியாளர் அன்பறிவு, கலை இயக்குனர் சதீஷ்குமார், நடன இயக்குனரக தினேஷ் என டெக்னீஷியன்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆனால் விஜய் ரசிகர்களை இது வருத்தப்பட வைத்துள்ளது. ஏனென்றால், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான, விக்ரம் பட டைட்டில் டீசரை போலவே இந்த படத்துக்கும் இருக்கும் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கதாநாயகி அப்டேட் இருக்கும் என  எதிர்பார்த்தனர்.  அவை இல்லாததால். ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News